இன்டர்நெட் சென்சேஷன் ஆக ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் ஆனவர் அந்த படத்தின் நாயகி ப்ரியா வாரியர்.இந்த படம் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இவரது கண்ணசைவிற்கும் , பிளையிங் கிஸ்ஸிக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் அடிமையாகிவிட்டனர்.உமர் லுலு இயக்கத்தில் ஷான் ரஹ்மான் இசையில் உருவான இந்த படத்தில் ரோஷன் பிரியா வாரியருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

பிரியா வாரியருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி தாணு வெளியிட்டார்.இந்த படம் தமிழில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.2020 தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினார் ப்ரியா வாரியர்.சில மாதங்களுக்கு பிறகு பிறகு மீண்டும் இணைந்தார் ப்ரியா வாரியர்.

லாக்டவுனில் அதிக நேரம் சமூகவலைத்தளங்களில் செலவிட்டதால் தனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டதென்று அதற்கான காரணத்தை தெரிவித்தார்.இதனை தொடர்ந்து இவர் சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.இவற்றில் சில ரிலீஸிற்கு தயாராகவும் உள்ளன.தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில முக்கிய படங்களில் நடித்துள்ளார் ப்ரியா.

இவர் நிதினுடன் நடித்துள்ள செக் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் சுற்றித்திரியும் இவரது வீடியோக்கள் சில செம வைரலாகி வந்தன,அதில் தற்போது கார்டை வைத்து விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.இதில் எதிர்பாராத விதமாக மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்.