தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி அடுத்தடுத்து தனது வித்தியாசமான கதைதேர்வினால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ஆர்யா.சோலோ ஹீரோவாக மட்டும் இல்லாமல் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்தும் அசத்தியுள்ளார்

ஆர்யா.காப்பான் படத்தில் சூர்யா மற்றும் சயீஷாவுடன் சேர்ந்து நடித்தார்.சயீஷாவிற்கு ஆர்யா மீது காதால் மலர,ஆர்யா-சயீஷா இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.சமீபத்தில் OTT-யில் வெளியான டெடி படத்தில் ஆர்யா-சயீஷா இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இவரது சார்பட்டா பரம்பரை திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஆர்யா-சயீஷா இருவரும் தங்கள் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து பலருக்கும் Couple goals செட் செய்து வந்தனர்.

தற்போது ஆர்யா-சயீஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இருவருக்கும் ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை ஆர்யா-சயீஷா தம்பதிக்கு தெரிவித்து வருகின்றனர்.