இணையவாசிகளின் ஃபேவரைட்டாக திகழ்பவர் இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஓரு அதார் லவ் படத்தின் மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் கண் சிமிட்டியதால், 2018-ஆம் ஆண்டில் இணையத்தில் வைரலானார். பின்னர் அவர் இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். அதோடு ஸ்ரீதேவி பங்களா என்ற இந்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக உள்ள பிரியா, ஹேப்பி நியூ இயர் என்ற படத்தில் இடம் பெற்றுள்ள மான்வா லாகே பாடலுக்கு உதட்டை அசைத்து சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார். இதற்கு பிரியாவின் நண்பரும், இணைய பிரபலமுமான ஷரன் நாயர், உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுங்கள் என்று டைம் லைனில் கேட்டிருந்தார். 

எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருபத்தி இரண்டு வயதான நடிகை பிரியா, ஹ்ம்ம்ம்ம் நான் செய்வேன் என்று பதிலளித்திருந்து சமீபத்தில் வைரலானது. 

தற்போது செக் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்பாடல் படமாக்கப்பட்டு வரும் சூழலில், ஒரு காட்சியில் நிதின், பிரியா வாரியரை முதுகில் சுமந்து செல்லவேண்டும். இதற்காக பிரியா வாரியர் ஓடிவந்து ஏறும்போது, தவறி கீழே விழுந்தார். உடனே படப்பிடிப்பு தளத்தில் இருந்த நபர்கள் ஓடி வந்து பிரியாவை தூக்கி நிறுத்தினர். 

இந்த வீடியோவை பிரியாவே தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை கண்ட திரை ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பிரியா பிரகாஷுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தி வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier)