காதலனுக்காக காதல் மடல் தீட்டிய ப்ரியா பவானி ஷங்கர் !
By Aravind Selvam | Galatta | January 27, 2020 17:44 PM IST
செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து மாஃபியா,இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் ப்ரியா பவானி ஷங்கர் ஒரு பதிவிட்டுள்ளார்.இன்று அவரது காதலன் ராஜவேலின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார்.தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த விஷயங்களை தொகுத்து ஒரு கவிதையாக தொகுத்துள்ளார்.இந்த பதிப்பு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.