தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Master Track List Clarification Vijay Anirudh

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

Master Track List Clarification Vijay Anirudh

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மூன்றாவது போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ட்ராக் லிஸ்ட் என்று சமூகவலைத்தளங்களில் ஒரு லிஸ்ட் உலவி வந்தது.இது குறித்து விசாரித்த போது இது போலியான லிஸ்ட் என்றும் விரைவில் மாஸ்டர் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Master Track List Clarification Vijay Anirudh