ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தனர்.

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கும் விதமாக பல்வேறு டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு தருவது வழக்கம். பிரச்னைகளை கிளப்பிவிட்டாலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்றே பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பிக்பாஸ் சீசனில் குசும்புத்தனம் செய்து கொண்டு அவ்வப்போது வெடிகளை கொளுத்திப் போட்ட சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது நிகழ்ச்சிக்கு பலவீனமானது. 

ரசிகர்கள் தாண்டி திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகர் பரத், பிக்பாஸ் குறித்து பதிவு ஒன்றை செய்தார். அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள். அவர்களிடம் கன்டென்ட் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.  

அதற்கு பதிலளித்திருக்கும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, நாம் இரண்டு பேரும் உள்ளே செல்வோமா என்று கேள்வி எழுப்பினார். இந்த உரையாடலை பார்த்த நெட்டிசன்கள் பிரேம்ஜி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் நிகழ்ச்சி காமெடியாகவும், பிக்பாஸ் வீட்டினர் கலகலப்பாக இருப்பார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். பிரேம்ஜி ஸ்டைலில் கூறவேண்டும் என்றால், எவ்ளோவோ பண்ணிட்டோம்...இத பண்ணமாட்டோமா !!! 

தமிழ் திரையுலகில் நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரேம்ஜி. இசை சுனாமியான பிரேம்ஜிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நெட்டிசன்களில் இவரும் ஒருவர். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான  பிரேம்ஜி, 2003-ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். 

அதன் பின் தொடர்ந்து பல வெற்றி படங்களில் பிரேம்ஜி நடித்தார். சென்னை 28 திரைப்படத்தில் பிரேம்ஜி பேசிய என்ன கொடுமை சார் இது வசனம் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. படங்களில் நடித்துள்ளார். அதன் பின் தல அஜித்தின் மங்காத்தா படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சத்திய சோதனை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் இந்த படம் தயாராகி வருகிறது.