அஜித் நடித்து வெங்கட் பிரபு இயக்கி வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்  நடிகர் மஹத் ராகவேந்திரா. தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த மஹத், விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன்2 கலந்து கொண்டார்.

பிறகு மஹத் பிரபல மாடல் அழகியான ப்ராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். ப்ராச்சி மிஸ்ரா மாடலிங் துறையில்  பல பட்டங்களை வென்றுள்ளார். குறிப்பாக FEMINA மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ள ப்ராச்சி மிஸ்ரா. 2012-ல் MISS EARTH-ல் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இப்போது ப்ராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருக்கிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கருவுற்றதிலிருந்து பல விஷயங்களை பகிர்ந்து வந்த ப்ராச்சி மிஸ்ரா பிரசவத்திற்கான தேதி நெருங்கி வருவதால் தன்னுடைய பிரசவத்திற்கு தயாராகி வருகிறார். பெருந்தொற்று பரவிவரும் நிலையில் பிரசவம் ஒரு சாதாரண விஷயம் இல்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள ப்ராச்சி மிஸ்ரா,

“மாஸ்க் உடன்  இருக்கும்  இந்த வாழ்க்கை எளிதல்ல 

இந்த மோசமான காலகட்டத்தில் வாழ்வதும் எளிதல்ல 

இப்போது நமக்கு தேவையானதெல்லாம் அன்பும் நம்பிக்கையுமே

எங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை தர இருக்கிறோம் 

இந்த மோசமான காலகட்டம் விரைவில் முடிந்து ஒரு நல்ல உலகை காண விரும்புகிறோம்" 

என தெரிவித்து பிரசவத்திற்கு தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார்.