விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பபங்கேற்று அசத்தியிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்திருந்தார் பவித்ரா.மேலும் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தும் அசத்தியுள்ளார் பவித்ரா.உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று அசத்தியிருந்தார்.மேலும் மிஸ் மெட்ராஸ் போன்ற சில பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார் பவித்ரா.

தமிழில் ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் ஒரு படம்,கதிர் ஹீரோவாக நடிக்கும் படம் என சில படங்களில் நடித்து வருகிறார் பவித்ரா.தற்போது இவர் நடித்துள்ள யுகி என்ற படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.UAN Film House, Juvis Productions, and AAAR Productions இந்த படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜாக் ஹாரிஸ் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.கதிர்,நரேன்,நட்டி,பவித்ரா லக்ஷ்மி,கயல் அனந்தி,ஆத்மீயா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த மோஷன் போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்