தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு. பல விருதுகளை வாங்கிக் குவித்த ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்கிறார் .பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஒத்த செருப்பு ரீமேக்கில் நடிக்கிறார்.

ஒத்த செருப்பு ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் , நடிகராகவும் பார்த்திபன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் . குறிப்பாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக தயாராகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் உலக சாதனை படைப்பாக இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் இரவின் நிழல். உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் திரைப்படமாக இரவின் நிழல் திரைப்படம் தயாராகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இரவின் நிழல் படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரவில் நிழல் படத்தின் முன்னோட்டமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பியானோ வாசிக்கும் புதிய புரோமோ டீசர் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.