விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்து வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த தொடரில் நடித்த முன்னணி நட்சத்திரங்கள் அனைவருக்கும் தனி தனியே ரசிகர்கள் பட்டாளங்கள் உருவாகின.800 எபிசோடுகளை கடந்து விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் உருவெடுத்தது.

இந்த தொடர் பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.குறிப்பாக தெலுங்கில் தமிழை போலவே மிக பெரிய வெற்றி தொடராக இந்த தொடர் அவதரித்தது.

வதினம்மா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்றது.தமிழில் முன்னணி வேடத்தில் நடித்த சுஜிதா தெலுங்கிலும் அதே வேடத்தில் நடித்து அசத்தினார்.இவருடன் பிரியங்கா நாயுடு,மஹேஸ்வரி என தெலுங்கின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் 808 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.இதுகுறித்து ஒரு வீடீயோவை சுஜிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.