தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து மெகா ஹிட்டான மங்காத்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மஹத் ராகவேந்திரா. தொடர்ந்து தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த ஜில்லா திரைப்படத்திலும் மஹத் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தெலுங்கில் பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட், பன்னி அண்ட் ஜெர்ரி, லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள மஹத், தமிழில் சென்னை 600028 ll, சிலம்பரசனின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடைசியாக தெலுங்கில் வெளியான சைக்கிள் திரைப்படத்தில் நடித்த மஹத் அடுத்ததாக கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா எனும் தமிழ் படத்தில் நடித்துவருகிறார். மேலும் பாலிவுட்டில் நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரேஷி இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் மஹத் நடித்து வருகிறார்.

இதனிடையே aha Tamil OTT தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள எமோஜி வெப்சீரிஸில் மஹத் நடித்து வருகிறார். ரொமான்டிக்கான காதல் வெப் சீரியஸாக சென்.S.ரங்கசாமி இயக்கத்தில் தயாராகும் இந்த எமோஜி வெப் சீரிஸில் தேவிகா சதீஷ் கதாநாயகியாக நடிக்க, மானசா, ஆடுகளம் நரேன், VJ ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் R.H.விக்ரம் இசையமைக்கிறார்.

இந்நிலையில் எமோஜி வெப்சீரிஸின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வெப்சீரிஸ் குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.