நேர்கொண்ட பார்வை அகலாதே பாடல் வீடியோ
By Sakthi Priyan | Galatta | August 13, 2019 16:40 PM IST
ஒரு சில படங்களே, பார்வையாளனை திரைக்குள் இழுத்துப் போடும் வல்லமை கொண்ட படமாக இருக்கும். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா மற்றும் தல அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்...இல்லை இல்லை பாடம் நேர்கொண்ட பார்வை. கடந்த வாரம் வெளியாகி சீரான வரவேற்பை பெற்றது இந்த படம்.
மீரா, ஃபாமி, ஆண்ட்ரியா எனும் மூன்று பெண்கள் தங்களது நண்பர்களுடன் ஒருநாள் இரவு உணவருந்த ரெசார்ட்டிற்கு செல்கிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு சம்பவம், அதன் தொடர்ச்சியாக இப்பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள்… சட்டமும், காவல்துறையும் சேர்ந்துகொண்டு இப்பெண்களை காயப்படுத்துகிறது. அதிலிருந்து எவ்வாறு வெளி வருகிறார்கள், யார் காப்பாற்றுகிறார்கள், பிறகு என்னென்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதைச்சுருக்கம்.
தற்போது படத்திலிருந்து அகலாதே பாடல் வீடியோ வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ப்ரித்வி பாடிய இந்த பாடலின் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார்.