செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். மார்ச் 5ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதை என்பதால் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதளவில் ஈர்த்தது. அதுமட்டுமின்றி யுவனின் இசையில்  பின்னி பெடலெடுத்திருந்தார். பணக்கார தம்பதியினரான எஸ்.ஜே.சூர்யா - நந்திதாவின் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பணிக்கு வருகிறார் ரெஜினா.

அப்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஜினா மீது ஆசை வருகிறது. அதற்கான முயற்சியின் போது ரெஜினா மிகவும் கோபமடைகிறார். ஒரு கட்டத்தில் அவரை கற்பழித்துக் கொலை செய்துவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. அதற்குப் பிறகு என்னவாகிறது என்பதே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கதைக்கரு. 

படத்தின் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் வீடியோவை தொடர்ந்து தற்போது கண்ணுங்களா செல்லங்களா பாடல் வீடியோ வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா பாடிய இந்த பாடல் வரிகளை செல்வராகவன் எழுதியுள்ளார். 

எஸ்.ஜே.சூர்யா கைவசம் மாநாடு திரைப்படம் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார்.