சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார். கோலமாவு கோகிலா புகழ் இயக்குனர் நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். கேங் லீடர் படத்தில் நடித்த ப்ரியங்கா அருள் மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Nelson About Sivakarthikeyans Role In Doctor Movie Nelson About Sivakarthikeyans Role In Doctor Movie

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் லாக்டவுனில் எடிட்டிங் பணிகள் நடந்து வந்தது. படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அரசு சொல்லும் நிபந்தனைகளை பொறுத்து எங்கு நடக்கும் என்று முடிவுசெய்யப்படும் என்று இயக்குனர் நெல்சன் தெரிவித்தார். 

Nelson About Sivakarthikeyans Role In Doctor Movie

நேற்று கலாட்டா குழுவுடன் முகநூல் பக்கத்தில் லைவ் வந்த இயக்குனர் நெல்சன் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்தார். படத்தில் வித்தியாசமான SK இருப்பார் என்று தெரிவித்தார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி படத்தின் ட்ரைலர் அமையும் என்ற ருசிகர செய்தியை கூறினார். படம் முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்திருந்தாலும், சிவகார்த்திகேயனுக்கு என ஹீரோயிஸம் கலந்த ஆக்ஷன் மொமெண்ட்ஸ் வைக்கப்பட்டுள்ளது என்றார்.