தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த தீபாவளி வெளியீடாக ரிலீசான மூக்குத்தி அம்மன் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அவள் படத்தின் இயக்குனர் மில்லன்ட் ராவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை இன்று நடிகை நயன்தாரா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.R.பிரபு தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனரான G.S.விக்னேஷ் எழுதி இயக்கும் இத்திரைப்படத்திற்கு ரான் எத்தன் யோஹன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.