இயக்குனர் மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள Anthology வெப் சீரிஸ் நவரசா. Netflix தளத்தில் விரைவில் வெளியாகவுள்ள இந்த தொடர் கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்.

தமிழ் திரையுலகின் பிரபலங்களை நவரசா ஒன்றிணைக்கிறது. இந்த அற்புதமான தொகுப்பில், அரவிந்த் சுவாமி, பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன்,ரதிந்திரன் பிரசாத்,பிரியதர்ஷன்,வசந்த் சாய்,சர்ஜுன் உள்ளிட்ட ஒன்பது இயக்குநர்கள் ஒவ்வொரு உணர்ச்சியிலும் தங்களின் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்துகிறார்கள்.

சூர்யா,விஜய்சேதுபதி,அரவிந்த் சுவாமி,சித்தார்த்,அதர்வா என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து இந்த தொடரில் நடித்து அசத்தியுள்ளனர்.இந்த தொடரில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் அவர்களது லுக் குறித்த விவரங்களை நேற்று Netflix வெளியிட்டனர்.

இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,இந்த தொடரின் அறிவிப்பு டீஸர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன,தற்போது விஜய்சேதுபதி நடித்துள்ள பகுதியில் இருந்து யாதோ என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர்