கைதி படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ள கார்த்தி அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை Dream Warrior Pictures சார்பாக S.R.பிரபு தயாரிக்கிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Napoleon Plays Karthi Father in Sultan Rashmika

இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.விவேக் - மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தில் சதிஷ்,பொன்னம்பலம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Napoleon Plays Karthi Father in Sultan Rashmika

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கு சுல்தான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தற்போது இந்த படத்தில் கார்த்தியின் தந்தையாக நடிக்க நெப்போலியன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Napoleon Plays Karthi Father in Sultan Rashmika