கடந்த 2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற வெற்றி படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். சிறந்த நடிகரான இவர் சீரான பாடகரும் கூட. அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார். 

Nakkhul

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். சமையல், உடற்பயிற்சி என சேலஞ்ச் செய்து வருகின்றனர். 

Nakkhul

தற்போது சுவரில் கால் வைத்து தலைகீழாக நின்று டீஷர்ட் போட வேண்டும். இந்த சேலஞ்ச் பெயர் டாம் ஹாலண்ட் சேலஞ்ச். அனைத்து திரைப்பிரபலங்களும் இந்த சவாலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நகுல் இந்த சவாலை ஏற்று வெற்றிகரமாக முடித்து வீடியோவை இன்ஸ்டக்ராமில் பதிவு செய்துள்ளார்.