தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். இயக்குனர் சிகரம் KB கண்டெடுத்த பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதர். 

vivekh

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.

Vivekh

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை tag செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால் block ஆகும். நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.