தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தனது கடின உழைப்பால் முன்னேறி தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.

அதேபோல கிரிக்கெட் உலகில் அறிமுகமாகி அடுத்ததாக கேப்டன் ஆகி இந்தியாவிற்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்து பெருமை சேர்த்தவர் மகேந்திர சிங் தோனி.தனது அசத்தலான கேப்டன்ஷிப் திறமையால் பலகோடி ரசிகர்களை பெற்றவர் தோனி.ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

அதனால் இவருக்கு தமிழகத்தில் ஸ்பெஷல் அன்பு எப்போதும் கிடைக்கும்.இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்றும் அழைப்பார்கள்.தங்களது துறையில் ஜாம்பவானாக இருக்கும் இரண்டு பேர் சந்திப்பது என்பது அவ்வளவு எளிதில் நடக்காது.அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

விஜய் நடிக்கும் Beast படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.சில நாட்களுக்கு முன் சென்னை வந்த தோனி ஒரு விளம்பர பட ஷூட்டிங்கிற்காக அதே ஸ்டுடியோவில் வந்துள்ளார்.அப்போது இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.தமிழகத்தின் செல்லப்பிள்ளைகளான இருவரின் திடீர் சந்திப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன