விஜய் டிவியில் கடந்த 2018-2019-ல் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று அவளும் நானும்.இந்த தொடரின் ஹீரோயினாக தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் மௌனிகா தேவி.இந்த தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியவர் மௌனிகா தேவி.இந்த தொடரில் நடித்து பட்டிதொட்டி எங்கும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் மௌனிகா.

இதனை தொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பூவே செம்பூவே என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.இவற்றை தவிர சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் மௌனிகா.சமீபத்தில் சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான மகராசி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் மௌனிகா.மௌனிகாவிற்கு கடந்த மே 24ஆம் தேதி திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

கலர்ஸ் தமிழின் பெரிய வெற்றியடைந்த தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே நவீன் மற்றும் ஹிமா பிந்து இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரின் முதல் அத்தியாயம் நிறைவடைந்து பார்ட் 2 வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகவுள்ளது.இதில் நவீன்,ஹிமா இருவரும் தொடர்ந்து நடிப்பார்கள் என்று தெரிகிறது.

இதயத்தை திருடாதே 2-வின் அறிவிப்பு ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியானது.தற்போது இந்த தொடரில் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் மௌனிகா நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.