தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மோகன் ராஜா, தமிழில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து எம்.குமரன் S/O, மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி & அரவிந்த்சாமி இணைந்து நடித்த தனிஒருவன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இத்திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்து நடித்த வேலைக்காரன் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் தற்போது தனது புதிய திரைப்படத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்திருக்கிறார் மோகன் ராஜா. மலையாளத்தில் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக தயாராகும் திரைப்படத்தை மோகன்ராஜா தெலுங்கில் இயக்குகிறார்.

கோனிடெலா புரோடக்சன் கம்பனி தயாரிக்கும் இப்படத்திற்கு ,தமன்.S இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ராஜா படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளார் தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.