ரேடியோவில் RJ-வாக பணியாற்றியவர் மிர்ச்சி செந்தில். நடிகராக ஒரு சில படங்களில் தலை காட்டினாலும் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் உலகமெங்கும் பிரபலமானார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த ஶ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 

senthil

 ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். மே 3-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாத திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.

Mirchi Senthil

இந்நிலையில் செந்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவியுடன் ஒரு அழகான வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் புத்தாண்டு வாழ்த்தை அவர் தமிழில் சொல்ல, அவர் மனைவி மலையாளத்தில் சொல்கிறார். இந்த அழகான ஜோடியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Our New year Wishes From 2 States.

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983) on