தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Trailer Not To Release Now Says Director

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master Trailer Not To Release Now Says Director

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் அட்லீயின் அந்தகாரம் படத்தை பாராட்டிய மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் மாஸ்டர் படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ரத்னகுமார் மாஸ்டர் ட்ரைலர் அல்லது எதாவது ஒரு அப்டேட் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.இதற்கு பதிலளித்த லோகேஷ் இப்போது எல்லாரும் பத்திரமாக இருப்போம் பின்னர் இதுகுறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.