தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Team Denies Vijay Assurancce For Loss

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master Team Denies Vijay Assurancce For Loss

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படம் OTTயில் வெளியாகும் என்ற வதந்திகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தன.இந்த செய்தி தவறானது என்றும் மாஸ்டர் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று விஜய் தெரிவித்ததாக பிரபல பாலிவுட் விநியோகஸ்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.மேலும் இந்த படம் நஷ்டமடைந்தால் விஜய் செட்டில் செய்வதாக தெரிவித்ததாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

Master Team Denies Vijay Assurancce For Loss

இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தபோது இந்த செய்தி மிகவும் தவறானது என்று தெளிவுபடுத்தினார்.விஜய் அப்படி யாருக்கும் வாக்குறுதி தரவில்லை என்றும் மாஸ்டர் 5 மொழிகளில் வெளியாகாது என்பதையும் தெரிவித்தனர்.

Master Team Denies Vijay Assurancce For Loss