மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த லோகேஷ் கனகராஜ்.கடந்த தீபாவளிக்கு வெளியான கார்த்தி நடித்த கைதி படத்தின் மூலம் ஹிட் இயக்குனராக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

Master Director Lokesh Kangaraj Joins Instagram

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாவதாக இருந்து கொரோனவால் ரிலீஸ் தள்ளிப்போனது.தான் ட்விட்டரில் மட்டும் தான் இருப்பதாக லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

Master Director Lokesh Kangaraj Joins Instagram

தற்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளதாகவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் லிங்கையும் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இனி ரசிகர்கள் அவரிடம் இன்ஸ்டாகிராமிலும் அப்டேட் கேட்டு அன்பு தொல்லை செய்யவுள்ளனர்.