கிராமத்து தோழிகளுடன் ராம்ப் வாக் செய்த மணிமேகலை !
By Sakthi Priyan | Galatta | May 14, 2020 10:52 AM IST

காமெடி கலந்த பேச்சால் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் VJ மணிமேகலை. தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று உலகளவில் பிரபலமானார்.
ஊரடங்கின் போது கிராமத்தில் பொழுதை கழிக்கும் மணிமேகலை தனது கணவருடன் காமெடியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஊரில் உள்ளவர்களுக்கு நடனம் கற்றுத்தருவது, சமைப்பது, விளையாடுவது என அட்டகாசம் செய்து வருகிறார். இவரது பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கிராமத்து பெண்களுடன் சேர்ந்து ராம்ப் வாக் வீடியோ வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Happy days hero gets married today during lockdown
14/05/2020 02:16 AM
Jassi King - The FAKR | Official Teaser | Releasing on 22-MAY only on KOOKU app
14/05/2020 01:54 AM