கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் பல சுப காரியங்கள் தள்ளிப்போடப்படுகிறது. குறிப்பாக திருமண நிகழ்ச்சிகள் தள்ளி போவதால் மணமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒரு சிலர் சகுனம் சரியில்லை என்றெல்லாம் நினைக்கின்றனர். ஆங்காங்கே மாஸ்க் அணிந்து சிம்பிளாக திருமணங்கள் நடந்து வருகிறது. 

ChembanVinod

காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மலையாள நடிகர் செம்மன் வினோத் ஜோஸ். கோலிசோடா 2, ட்ரான்ஸ், சார்லி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது கொரோன ஊரடங்கு காரணமாக எளிய முறையில் திருமணம் செய்துள்ளார். 

ChembanVinod

இவரது மனைவி மரியம் ஒரு மனநல ஆலோசகர். இன்று இவருக்கு ரிஜிஸ்டர் திருமணம் நடைபெற்றது. மனைவியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JUST MARRIED 🎉🎉🎉🎉.

A post shared by Chemban Vinod Jose (@chembanvinod) on