தங்கலான்: 'யாராவது என் கையைப் பிடித்துக் கொள்ள முடியுமா?'- இறுதி கட்டப் பணிகள் பற்றி மாளவிகா மோகன் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்!

தங்கலான் இறுதி கட்டப் பணிகள் பற்றி மாளவிகா மோகன் கொடுத்த அப்டேட்,malavika mohanan started dubbing for thangalaan movie | Galatta

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் தங்கலான் திரைப்படத்தின் டப்பிங் குறித்த முக்கிய அறிவிப்பை மாளவிகா மோகன் பகிர்ந்து கொண்டார். தங்கலான் திரைப்படத்திற்கான தன் பகுதி டப்பிங் பணிகளை மாளவிகா மோகனன் தற்போது தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் டப்பிங் பணிகளை மேற்கொள்வதற்காக செல்லும் தனது புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன், "இப்போது திரைப்பட தயாரிப்பின் மிகவும் பயங்கரமான ஒரு பகுதிக்கு நான் செல்கிறேன். டப்பிங்... இதை நான் பண்ணும் போது தயவு செய்து யாராவது என்னுடைய கையை கொஞ்சம் பிடித்துக் கொள்ள முடியுமா?" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தனது டப்பிங் பணிகள் குறித்து மாளவிகா மோகன் பகிர்ந்து உள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவு இதோ… 

 

Now for the most scary part of the filmmaking process for me..dubbing 🙈
(Can someone please come and hold my hand while I do it please? 🥺)#thangalaan pic.twitter.com/oM6Yt0BXiW

— Malavika Mohanan (@MalavikaM_) November 29, 2023

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பார்வதி திரைப்படத்தின் தன் பகுதி டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் அதற்கு முன்பாக ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் தங்கலான் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார். மேலும் டப்பிங்கில் ஈடுபட்டிருக்கும் வீடியோவில் படத்தின் ஒரு சிறிய வீடியோ ஒன்றையும் டேனியல் கால்டகிரோன் வெளியிட்டு இருந்தார். டப்பிங் ஸ்டுடியோ ஸ்கிரீனில் தங்கலான் திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சியின் ஷாட் இருந்தது. அதில் சீயான் விக்ரமுக்கு பின்னால் நடிகர் டேனியல் கால்டகிரோன் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருந்த ஷாட்டின் சில நொடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரமும் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் அவர்களும் முதல்முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் தான் இந்த தங்கலான். கதையின் நாயகனாக தங்கலான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சீயான் விக்ரம் உடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன், டேனியல் கால்டகிரோன் ஆகியோர் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக தங்கலான் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் இந்திய சினிமாவில் பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய படமாக மிகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட ஒரு எமோஷனல் பீரியட் ஆக்சன் திரில்லர் படமாக ரசிகர்களுக்கு பெரிய விஷுவல் ட்ரீட்டாக 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தை  PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வர இருக்கிறது தங்கலான் திரைப்படம்.