கடந்த 2017-ம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதனைத்தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார். 

lokeshkanagaraj

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை XB ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சில தினங்கள் முன்பு மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

lokeshkanagaraj

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நோய் வேகமாக பரவாமல் காத்துக்கொள்ளவும் இந்த நடிவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துகொள்ளுங்கள். பத்திரமாக வீட்டிலேயே இருங்கள் என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.