இசை கச்சேரிகளில் பெயர் பெற்ற குழு என்றால் லஷ்மன் ஸ்ருதி தான். இந்த இசைக் குழுவை ராமன் - லஷ்மன் என்ற இரட்டையர்கள் துவங்கி எண்ணற்ற இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். சென்னையில் திருவையாறு என்ற பெயரில் கர்நாடக இசை கலைஞர்களை வைத்து கடந்த 15 வருடங்களாக வெற்றிகரமாக இசை கச்சேரி நடத்தி வருகின்றனர். 

lakshmansruthi

இரவு 9 மணியளவில் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த போது அவரது அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக காணப்பட்டார் ராமன். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

lakshmansruthi

பின்னர் அசோக் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பூத உடல் அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலக்காக வைக்கப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்கள் எல்லோருக்கும் வாய்ப்பளித்த ராமனின் இழப்பு அனைத்து கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.