தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அமலா பால்.மைனா படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் அமலா பால்.இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் அமலாபால்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னட உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருந்தார் அமலா பால்.

கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அசத்திவிட்டார் அமலா பால்.இவர் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அதோ அந்த பறவை போல,காடவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களின் ரிலீஸ் கொரோனவால் தள்ளிப்போயுள்ளது.

இவர் நடித்த Ptha Kathalu என்ற Anthology படம் நேரடியாக OTT-யில் வெளியானது.லூசியா,யூடர்ன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பவன் குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள குடி யெடமைதே ( Kudi yedamaithe )   வெப் சீரிஸில் முன்னணி வேடத்தில் நடித்து வந்தார்.இந்த தொடர் வரும் ஜூலை 16ஆம் தேதி Aha தளத்தில் வெளியாகவுள்ளது.

தொடரின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் இதன் டீசரை தற்போது குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்