சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை கிரண். அதனைத்தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், தென்னவன், திருமலை போன்ற படங்களில் நடித்து அசத்தினார். வெகு நாட்கள் பிற மொழிகளில் பிஸியாக இருந்தவர் கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் நடித்திருந்தார். 

Kiran Dancing For Thalapathys Vaathi Coming Song

அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கிரண் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Kiran Dancing For Thalapathys Vaathi Coming Song

அதில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் தவிர்த்து பிரபலங்களும் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். திருமலை படத்தில் தளபதி விஜய்யுடன் வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு நடனமாடியிருப்பார் கிரண். இவர் தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடியது நெட்டிசன்களை ஈர்த்துள்ளது.