தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

Keerthy Suresh Replaced in Maidaan By Priyamani

இதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் மிஸ் இந்தியா,தமிழில் ரஜினியின் தலைவர் 168 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். Badhaai Ho பட இயக்குனர் இயக்கும் மைதான் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமாகவிருந்தார்.இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

Keerthy Suresh Replaced in Maidaan By Priyamani

அஜய் தேவ்கன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.தற்போது இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் சில காரணங்களால் விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.மேலும் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக ப்ரியாமணி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Keerthy Suresh Replaced in Maidaan By Priyamani