கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா ஷூட்டிங் குறித்த சிறப்பு தகவல் !
By Aravind Selvam | Galatta | January 27, 2020 19:11 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றுள்ளார்.இதனை தொடர்ந்து பென்குவின்,தலைவர் 168 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இது தவிர தமிழ் தெலுங்கில் உருவாகிவரும் படத்திலும் நடித்து வருகிறார்.நதியா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை நரேந்திரநாத் இயக்குகிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.இந்த ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.