தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இந்த படம் உருவாகியிருக்கிறது. விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு, பிகில் போன்ற படங்களை தொடர்ந்து கதிர் நடிப்பில் வெளியான படம் ஜடா. அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

jada

இதில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருந்தார். ரோஷினி நாயகியாகவும், யோகி பாபு, கார்த்திக் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. 

kathir

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதன் ஆடியோ லான்ச் நவம்பர் 27-ம் தேதி சென்னை பிரசாத் லாபில் நடைபெற்றது. தற்போது படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.