தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

rajini

இந்த படத்தின் மூலம் சிறுத்தை சிவா முதன் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்பட்டு வருகிறது. தர்பார் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், நேற்று மாலை சும்மா கிழி பாடல் வீடியோ வெளியாகி இணையத்தை தெரிக்கவிடுகிறது. 

padayappa prakashraj

படத்தில் நடிகர் சூரி, நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். இருபது ஆண்டுகள் கழித்து சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்கிறார் என்பது சிறப்பு தகவல். இறுதியாக படையப்பா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.