தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். எந்த கதையை எடுத்தாலும் அந்த கதையை நமக்குள் ஊடுறுவது போல கலங்கடிப்பார். பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் பட்டையைக் கிளப்பி வருகிறது. விரைவில் டீஸர் அல்லது ட்ரைலர் காட்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதவி இயக்குனராக பணிபுரிந்த சமயத்தில் நீயா நானா செட்-ல் செம்ம குத்தாட்டம் ஒன்றை போட, அரங்கமே அதிர்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆடல், பாடல் என அசத்தும் இயக்குனர் மாரி செல்வஜை பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள். மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளது தெரியவந்தது. புத்தாண்டை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார் துருவ் விக்ரம். 

உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு ஆகிய தகவல்களை துருவ் விக்ரம் தெரிவிக்கவில்லை. மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது விளையாட்டை மையப்படுத்திய கதை என்றும் செய்திகள் இணையத்தில் வலம் வந்தது.