தென்னிந்திய நடிகர்களில் தரமான கதைகளில் கவனம் செலுத்தும் நடிகர் துல்கர் சல்மான். கடைசியாக வரனே அவஷ்யமுண்டு எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். இவர் கைவசம் வான் திரைப்படம் உள்ளது. தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துள்ளார். 

dulquersalman dulquer

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருக்கிறார். மசாலா கஃபே இசையமைத்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் துல்கரின் நண்பராக நடித்துள்ளார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவான இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

dulquer dulquer

படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. என்னை விட்டு பாடல் வீடியோவை தொடர்ந்து இரண்டாம் பாடலான சிரிக்கலாம் பறக்கலாம் பாடல் வீடியோ வெளியானது. பென்னி டயல் இந்த பாடலை பாடியுள்ளார். பிப்ரவரி 28-ம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது.