சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

suriya

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீஸர் மற்றும் மாறா தீம் பாடல் வெளியாகி சக்கை போடு போட்டது. 

suntv

மாறா தீம் மற்றும் வெய்யோன்சில்லி பாடல்கள் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. தற்போது படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. சம்மர் ரிலீஸாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.