லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் ப்ரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்த படம் காளிதாஸ். பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.  

bharath

விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. நாளைய இயக்குநர் சீசன் 3-ல் கலந்து கொண்ட ஸ்ரீசெந்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். 

aadhavkannadhaasan

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ஆதவ் கண்ணதாசன் கலாட்டா குழுவிற்கு பேட்டியளித்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும், இத்திரைப்படம் உருவான விதம் குறித்தும் பேசியுள்ளார்.