வயிற்று வலிக்கு ஆணுறையை எழுதிக்கொடுத்த டாக்டர் டிஸ்மிஸ்!
By Arul Valan Arasu | Galatta | September 03, 2019 17:52 PM IST
ஜார்கண்ட் மாநிலத்தில் வயிற்று வலிக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஆணுறையை எழுதிக்கொடுத்த டாக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள காட்ஷிலா அரசு மருத்துவமனையில், பெண் ஒருவர் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதித்த அஷ்ரப் பாதர் என்ற டாக்டர், மருந்து என்று ஒரு பெயரை, சீட்டில் எழுதிக்கொடுத்துள்ளார்.
அந்தப் பெண் மெடிக்கல் ஷாப்பில் மருந்துச்சீட்டை கொடுத்தப்போது, கடைக்காரர் அதில் எழுதியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், மருந்து சீட்டில் எழுதி உள்ளபடி ஆணுறையை எடுத்துக்கொடுத்துள்ளார். இதனால், தர்ம சங்கடமடைந்த அப்பெண், தலைமை மருத்துவரிடம் புகார் அளித்தார்.
இந்த பிரச்சனை அந்த மாநில சட்டப்பேரவை வரை எதிரொலித்தது. இதனையடுத்து. 3 பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு, மருத்துவர் அப்படி எழுதிக்கொடுத்து உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, டாக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
மேலும், டாக்டர் அஷ்ரப் பாதர், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களை அவமானப்படுத்தும் நோக்கில் இதுபோன்று அடிக்கடி நடந்துகொள்வதும், அவர் மீது ஏற்கனவே சிலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.