கொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள்,தமிழரசன்,மெட்ரோ பட இயக்குனருடன் ஒரு படம்,கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டனுடன் ஒரு படம் என பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

Vijay Antony Sri Divya

இதில் விஜய் மில்டன் இயக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு ஷிரிஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் ventures நிறுவனம் தயாரிக்கின்றனர்.தற்போது இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது.

Vijay Antony Sri Divya

வருத்தப்படாத வாலிபர் சங்கம்,காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Vijay Antony Sri Divya