தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பட்டாம்பூச்சி. ஜெய் மற்றும் சுந்தர்.C இணைந்து நடித்து சைக்கோ த்ரில்லர் படமாக வெளிவந்த பட்டாம்பூச்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

தொடரந்து இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் ஜெய் மற்றும் ஜீவா இணைந்து நடித்திருக்கும் காஃபி வித் காதல் திரைப்படம் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  அடுத்ததாக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் ஜெய் நடிப்பில் பிரேக்கிங் நியூஸ் திரைப்படமும் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே இயக்குனர் S.K.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள எண்ணித்துணிக திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. Rain Of Arrows தயாரிப்பில் Krikes Cine Creations வழங்கும் எண்ணித்துணிக திரைப்படத்தை MSM MOVIE TRADERS வெளியீடுகிறது. J.B.தினேஷ்குமார் ஒளிப்பதிவில் V.J.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். 

ஜெயுடன் இணைந்து அதுல்யா ரவி, வித்யா பிரதீப், அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் எண்ணித்துணிக திரைப்படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார். இந்நிலையில் எண்ணித்துணிக திரைப்படத்திலிருந்து என்னடியே என்னடியே எனும் ரொமான்டிக்கான வீடியோ பாடல் வெளியானது. அந்த வீடியோ பாடல் இதோ…