இணையத்தை அசத்தும் ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டர் !
By | Galatta | September 06, 2020 11:08 AM IST
ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் லிரிக் வீடியோவை வெளியிட்டது படக்குழு. தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது இப்பாடல். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். தனுஷ், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளனர். லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் உள்ளது.
சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் படத்தின் ரிலீஸ் குறித்து விளக்கமளித்தார். தியேட்டர்கள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்ப வேண்டாம். ரகிட ரகிட என தனுஷ் பாடுவதை திரையரங்கில் காண ஒட்டு மொத்த குழுவும் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்பதை தயாரிப்பாளர் உறுதி செய்தார்.
இந்நிலையில் படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை பார்க்கையில், லண்டனில் வரும் முக்கிய காட்சிகளில் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள திரையுலகில் நடித்து பிரபலமான ஐஷ்வர்யா லக்ஷ்மி, தமிழில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
Team #JagameThandhiram Wishes our heroine, a wonderful artist @AishwaryaLeksh4 a Very happy birthday 👏👏👍#Aishwaryalekshmi pic.twitter.com/21hdufgID6
— karthik subbaraj (@karthiksubbaraj) September 6, 2020
Watch the exciting grand promo of Bigg Boss 4 | show begins in style!
06/09/2020 10:00 AM
New Mass Promo Teaser of Bigg Boss 4 Tamil | Kamal Haasan in full form!
05/09/2020 06:11 PM
Latest update on Keerthy Suresh's next film with this young hero!
05/09/2020 05:39 PM