இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ஃபான்டஸி நகைச்சுவை திரைப்படம் ஜாக்பாட். அக்ஷய பாத்திரத்தை கதைக்கருவாய் கொண்டு நாம் திரையில் பார்த்து ரசிக்கும் பாத்திரத்தங்களை வடிவமைத்திருந்தார் இயக்குனர் கல்யாண்.

அக்ஷயா மற்றும் சாஷா எனும் பெயரில் கூட்டு களவாணிகளாய் ஊரை ஏய்த்து பிழைக்கும் திருடர்களாக தோன்றியுள்ளார் ஜோதிகா மற்றும் ரேவதி. எதிர்பாராத சமயத்தில் அக்ஷய பாத்திரம் பற்றி இந்த இருவரின் செவிகளுக்கு எட்டுகிறது. அதை இவர்கள் தேடிச் செல்வதும், பின்பு அதை அடைகிறார்களா ? அவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கிறதா என்பது தான் இந்த ஜாக்பாட் படத்தின் கதைச்சுருக்கம்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான பாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் ஜோதிகா, இந்த படத்திலும் அக்ஷயா எனும் ரோலில் ஃபிட் ஆகியுள்ளார். கமர்ஷியல் படத்தில் வரும் துணிச்சலான ஹீரோயின் என்ன என்ன வித்தைகள் கற்று வைத்திருப்பாரோ அதை சரியாக திரையில் செயல் படுத்தியுள்ளார். ஜோதிகாவின் வேகத்திற்கு இணையாக அசத்தியிருந்தார் ரேவதி. நடனம், காமெடி, பஞ்ச் வசனம் என இருவரும் தங்களது வேலையை கச்சிதமாக செய்திருந்தனர்.

தற்போது படத்திலிருந்து நகைச்சுவை Sneak Peek காட்சி வெளியானது. மொட்ட ராஜேந்திரனின் அசத்தலான நகைச்சுவை காட்சி ஈர்கிறது.