நாட்டையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர். கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Ishari

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு இருக்குமா ? அல்லது இயல்பு நிலை திரும்புமா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர். தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த பண உதவியை நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர்.

IshariKganesh IshariKGanesh

இந்நிலையில் ஐசரி கணேஷ் அவர்கள் நடிகர் சங்கத்திற்கு தனது உதவிகளை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் சங்கத்திற்கு 600 மூட்டைகள் அரிசி, பருப்பு மற்று அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மற்றவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக சுமோ, ஜோஷுவா இமை போல் காக்க, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் உள்ளது. ஐசரி கணேஷ் அவர்களது இச்செயலை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.