கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ் எனும் இனையதளம். இவர்கள் மீது எவ்வளவோ புகாரளித்தும் காவல்துறை எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அதே நம் அண்டை மாநிலமான கேரளாவில் மோகன் லால் நடிப்பில் வெளியான புலி முருகன் படத்தினை தங்கள் இனையதளத்தில் தமிழ் ராக்கர்ஸ் முறைகேடாக வெளியிட்டதையடுத்து கேரள போலீசார் தனிப்படையமைத்து கோவையில் வசித்து வந்த தமிழ் ராக்கர்ஸ் இனையதளத்தின் அப்லோடர் எனப்படும், படம் வெளியிடுபவர்கள் இரண்டு பேரை கைது செய்தது.

ஆனால் தமிழ்நாட்டிலோ அவர்களை நெருங்க கூட முடியாமல் திணருகின்றனர். சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகுமன்று காலையிலேயே லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் அளவுக்கு தைரியத்துடன் வலம் வருகின்றனர் அந்த இனைய தளத்தை சேந்தவர்கள். தமிழ் ராக்கர்ஸ் எப்படி இயங்குகிறது என்பதை பற்றிய அலசல் இதோ

தமிழ்ராக்கர்ஸ் உருவான கதை : 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது தமிழ்ராக்கர்ஸ். பெரும்பாலும் வெளிநாடுகளில் அனைத்து தமிழ் படங்களும் வெளியாவதில்லை. அப்படியே ஒரு படம் வெளியானாலும் ஒரு வாரம் அதற்க்கு திரையரங்கு கிடைத்தால் பெரிய விஷயம். எனவே சிங்கப்பூர், மலேசியா, லண்டன் போன்ற நாடுகளில் அதிகார்வபூர்வமான படத்தின் டிவிடிக்கள் விற்பனைக்கு வந்து விடும். இதனை விலை கொடுத்து வாங்கும் சில இளைஞர்கள் அதனை யூடியுப் மற்றும் இதர கானொளி தளங்கள் மூலம் பதிவேற்றம் செய்து அதனை பகிர்ந்து சமூக சேவையாக கருதி செய்து வந்தார்கள். பின்னர் அதனை டாரெண்ட் எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் பகிர்ந்தார்கள். டாரெண்ட் என்பது ஒரே நேரத்தில் ஒரு படத்தினை பதிவிரக்கம் செய்த அனைத்து கணிப்பொற்யிலிருந்து ஒவ்வொரு பகுதியாக ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் யுக்தி. பெரும்பாலும் வெளிநாடுகளில் குறைந்த படசம் 10mbpsசிலிருந்து 1gbps வரைக்குமான அதிவேக இனைய வசதி இருந்ததால் இந்த யுக்தி படங்களை பகிர்ந்து கொள்ள பயன்பட்டது. (இதே யுக்தியை பயன்படுத்தி ஆங்கில படங்களை வெளியிட்டு ஹாலிவுட்டை திணரடித்த பிரபல இனையதளம் சமீபத்தில் தான் முடக்கப்பட்டு அதன் உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டார்)

கடந்த 2014ம் ஆண்டு வரை அதிகபட்சமாக 8mbps அளவிற்க்கு மட்டுமே இங்கு இனையதள சேவைகள் அளிக்கப்பட்டு வந்ததால் படங்களை தரவிறக்கம் செய்யும் அவ்வளவு பிரபலமடைய வில்லை. ஆனால் ஆக்ட் இனையதள சேவை மற்றும் 3ஜி, 4ஜி போன்ற அதிவேக இனையதள சேவைகளின் காரணமாக சமீப காலமாக இது அதிகரித்து வருகிறது.

அதெல்லாம் சரி தமிழ்ராக்கர்ஸ் இனையதளம் எப்படி இயங்குகிறது தெரியுமா? கொஞ்சம் பொருங்கள் இன்னும் நிறைய இருக்கிறது கூற, நாளை தொடர்கிறேன்.....