நான் சிரித்தால் படத்திற்கு யூ சான்றிதழ் !
By Aravind Selvam | Galatta | January 09, 2020 12:20 PM IST
இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
நான் சிரித்தால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினையும் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கிறார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.