கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

ponniyinselvan manirathnam

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதிகாலை மூன்று மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட் சென்றுள்ளனர் படக்குழுவினர். பாகுபலி போல் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பன்னிரண்டு பாடல்கள் இருக்கக்கூடும் என்று சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். 

harini harini

இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக பிரபல பின்னணி பாடகி ஹரிணி கலாட்டா நேர்காணலில் கூறியுள்ளார். தனது கணவரான பாடகர் திப்புவுடன் இசை பயணம் பற்றி பகிர்ந்து கொண்டார்.